தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். வரும் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என்றும், அதிமுக ஒரு போட்டியே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திற்கு எடப்பாடி பழனிசாமி நேரில் செல்லவில்லை என்றும், 100 நாள் நடந்த அந்தப் போராட்டத்தில் அமைச்சர்கள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், பிரதமர் மோடி பங்கேற்ற மேடையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் புறக்கணிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் முகத்திற்காக மக்கள் வாக்கு அளிக்க மாட்டார்கள் என்று கூறினார்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த இபிஎஸ்-ஸின் செயல்பாடுகளையும் அவர் விமர்சித்தார். தங்கள் கட்சியின் ரகசிய ஆய்வுப்படி 40 சதவீத வாக்குகள் தவெக-விற்கு இருப்பதாகக் கூறிய அவர், 2026-ல் விஜய் முதலமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தார்.
