கான்பூர்-இட்டாவா நெடுஞ்சாலையில் ஓட்டுநர் இருக்கையில் யாரும் அமராமல், பக்கத்து இருக்கையில் இருந்த பெண் ஒருவர் ஸ்டீயரிங்கை பிடித்துக்கொண்டு கார் ஓட்டும் ஆபத்தான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை கவனித்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், விதிமீறலில் ஈடுபட்ட அந்த காருக்கு 32,300 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இந்தச் செயல் போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது என்றும், மற்ற பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இத்தகைய செயல்களை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பு மாத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கார் ஓட்டப்பட்டதாக பரவிய தகவலை போக்குவரத்துத் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்தப் பெண்ணிற்கும் அரசு நிகழ்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“>

 

இதற்கு முன்பும் இதேபோல அதிக பாரம் ஏற்றிச் சென்றது மற்றும் பைக் ஸ்டண்ட் செய்தவர்களுக்கு 14,000 முதல் 43,000 ரூபாய் வரை பெரிய தொகைகள் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.