டெல்லியின் பஜன்புரா பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 10, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுவர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த ஜனவரி 18-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில், சிறுமிக்கு உணவு தருவதாக ஆசை காட்டி அருகிலுள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியின் கைகளைக் கட்டி, வாயைப் பொத்தி இக்கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
ரத்தம் சொட்டச் சொட்ட மயக்க நிலையில் வீடு திரும்பிய சிறுமி, முதலில் கீழே விழுந்துவிட்டதாகக் கூறினாலும், பின்னர் பெற்றோரின் விசாரணையில் நடந்த உண்மையை அழுதுகொண்டே விவரித்துள்ளார்.
தற்போது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாலும், அவரால் நடக்கவோ அமரவோ முடியாத நிலையில் படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்களைப் போலீசார் பிடித்துள்ளனர், 14 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார்.
View this post on Instagram
“>
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, தனது மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக அந்தச் சிறுவர்களைப் பெரியவர்களுக்குரிய சட்டத்தின் கீழ் தண்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பயங்கரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
