ராஜஸ்தான் மாநிலத்தில் மைனர் சிறுவன் மற்றும் சிறுமிக்கு அவர்களது குடும்பத்தினர் கட்டாயத் திருமணம் செய்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக ரகசியமாகப் பேசி வந்த இவர்களது வாட்ஸ்அப் உரையாடல்களை எதிர்பாராத விதமாகப் பார்த்த குடும்பத்தினர், அதில் இருந்த தகவல்கள் ஊர் மரியாதைக்கும் பாரம்பரியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதி இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.
Rajasthan: Family Forces Two Children to Marry After Their WhatsApp Chat Gets Leaked pic.twitter.com/HoOs27BKcf
— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 28, 2026
திருமண மேடையில் இருவரும் விருப்பமில்லாமல் மாலை மாற்றிக்கொள்ளும் 8 விநாடிகள் ஓடும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சட்டப்படி இது தவறு என்றாலும், குடும்ப கௌரவத்தைக் காப்பதாகக் கூறி சிறார்களுக்குத் திருமணம் செய்து வைத்த பெற்றோரின் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
