ரயில்களில் உணவு விநியோகம் செய்பவர்களின் (Pantry Staff) அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஜிடி எக்ஸ்பிரஸ் (GT Express – 12615) ரயிலில் விடிசா மற்றும் பீனா ரயில் நிலையங்களுக்கு இடையே நடந்த ஒரு மோதல் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. அதில், ஒரு தனி நபரை 3 முதல் 4 பேண்டிரி ஊழியர்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்குவதைப் பார்க்க முடிகிறது.
வீடியோவின் தொடக்கத்தில் ஒரு ஊழியர் பயணாரைத் தாக்க, பிறகு அவரோடு மற்ற ஊழியர்களும் சேர்ந்து கொள்கின்றனர். அந்தப் பயணியைக் கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்று பேண்டிரி காருக்குள் வைத்துத் தாக்க அவர்கள் முயல்கின்றனர். ஆனால், அந்தப் பயணியோ தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போராடுகிறார். இதில் வேதனை என்னவென்றால், சக பயணிகள் முன்னிலையிலேயே இந்த அராஜகம் நடக்கிறது.
மேல் படுக்கையில் இருக்கும் ஒரு பயணி, இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் போனில் பேசிக்கொண்டிருப்பது மக்களின் கோபத்தை இன்னும் தூண்டியுள்ளது. ஆஷிஷ் கெய்க்வாட் என்பவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, ரயில்வே நிர்வாகம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
