தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ அருள், அரசியலில் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணி உருவாவதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய அவர், விஜய்யைச் சுற்றி இளைஞர்கள் தேனீக்களைப் போல உற்சாகமாகச் செயல்பட்டு வருவதாகவும், மக்கள் வாக்களித்து அவர் முதலமைச்சரானால் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், கூட்டணி தொடர்பாகப் பாமக அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதில் தமிழக வெற்றிக் கழகமும் உள்ளடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
