பஞ்சாப் மாநிலம் சாபுவானா கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான தடகள வீரர் தீபக் குமார், விளையாட்டுத் துறையில் அபாரமான சாதனைகளைப் படைத்தவர். மாநில அளவிலான போட்டிகளில் 16 தங்கப் பதக்கங்களையும், தேசிய அளவிலான போட்டிகளில் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். இருப்பினும், பதக்கங்கள் மட்டுமே அவருக்குக் கிடைத்துள்ளன; அரசாங்கத்திடமிருந்து தகுந்த வேலைவாய்ப்போ அல்லது போதிய பொருளாதார உதவியோ கிடைக்காதது பெரும் சோகமாக மாறியுள்ளது.
From National Champion to Sugarcane Juice Seller 🇮🇳
16 state golds.⁰2 national silvers.
No job. No support.
This is how India treats its athletes after the medals stop trending. pic.twitter.com/SVDrGYueC9— Believer (@PredatorVolk) January 26, 2026
தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கும் தீபக் குமார், தற்போது ஃபாசில்கா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே கரும்புச் சாறு விற்கும் கடை நடத்தி வருகிறார். நாட்டின் பெருமையாகக் கருதப்பட வேண்டிய ஒரு தேசிய அளவிலான வீரர், வறுமையின் காரணமாக வீதியோரத்தில் கடை நடத்தும் அவலம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு முறையான அங்கீகாரமும் வாழ்வாதாரமும் கிடைக்காமல் தவிக்கும் பல இந்திய வீரர்களின் எதார்த்த நிலையைத் தோல் உரித்துக் காட்டுகிறது.
