ஸ்விக்கி உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் தனது பணிக்கு இடையிலும் தனது மகளுக்குக் கல்வி கற்பிக்கும் நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடந்த ஜூலை மாதம் இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்தக் காணொளியில், அந்த ஊழியர் ஒரு கட்டிடத்தின் மின்தூக்கிக்கு அருகில் அமர்ந்து, தனது அடுத்த ஆர்டருக்காகக் காத்திருக்கும் நேரத்தில் தனது மகளுக்குப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Hindufeed (@hindufeed.in)

தனது குழந்தைகளுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தந்தையர்கள் படும் உழைப்பையும் தியாகத்தையும் இந்தப் பதிவு படம் பிடித்துக் காட்டுகிறது. சுமார் 1.70 லட்சம் விருப்பங்களைப் பெற்றுள்ள இந்தக் காணொளியைக் கண்ட இணையவாசிகள், அந்தத் தந்தையின் அர்ப்பணிப்பைக் கண்டு வியந்து, “உண்மையான சூப்பர் ஹீரோ நீங்கள்தான்” என்றும், “அந்தச் சிறுமிக்குச் சிறந்த எதிர்காலம் அமையும்” என்றும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.