கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும், இந்திய ராணுவ வீரர் ஒருவர் பனியில் படுத்து உறங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது மனதை நெகிழச் செய்துள்ளது. எல்லையில் நம் நாட்டுப் பாதுகாப்பிற்காக ராணுவத்தினர் எதிர்கொள்ளும் கடினமான வாழ்க்கை முறையை இந்த வீடியோ தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இந்நிலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வெறும் பனிப்படுக்கையில் போர்வையைப் போர்த்திக் கொண்டு அவர் உறங்கும் காட்சி, இந்திய வீரர்களின் அசாத்தியமான துணிச்சலையும் அர்ப்பணிப்பு உணர்வையும் உலகுக்கு பறைசாற்றுகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த ஆயிரக்கணக்கான இணையவாசிகள், அந்த வீரரின் தியாகத்தைப் பாராட்டி “பெரும் மரியாதை” எனத் தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
மேலும் நாம் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கு இவர்களின் இத்தகைய தியாகங்களே காரணம் எனப் பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், இந்திய ராணுவத்திற்குத் தங்கள் நன்றிகளையும் வீரவணக்கங்களையும் தெரிவித்து வருகின்றனர். வைரலாகி வரும் இந்த வீடியோ, தேசப்பற்றைத் தூண்டுவதுடன், மிகக் கடுமையான சூழலிலும் தளராத உறுதியுடன் பணியாற்றும் ராணுவ வீரர்களின் உன்னதத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
