அங்கமாலியில் 21 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் இறப்பதற்கு முன்னதாக தனது தோழிக்கு அனுப்பிய உருக்கமான ஆடியோ செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

அதில், தனது காதலனின் நடத்தை மற்றும் டொக்சிசிட்டி காரணமாக தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “அவனால் நான் என் நண்பர்கள் அனைவரையும் இழந்துவிட்டேன், யாரிடமும் பேச முடியாதபடி தனிமைப்படுத்தப்பட்டுவிட்டேன். இனி என்னால் தாங்க முடியாது” என்று அவர் கதறியது கேட்போரை கலங்கச் செய்கிறது.

இந்த ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையில், அந்தப் பெண்ணின் தற்கொலைக்குக் காரணமாகக் கருதப்படும் காதலன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நச்சுத்தன்மையான உறவு ஒரு இளம் உயிரை எப்படிப் பறிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான உதாரணமாக மாறியுள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் இந்தப் பெண்ணுக்கு நீதி கேட்டுப் பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில், காதலால் ஏற்படும் மன அழுத்தங்களுக்கு இளைஞர்கள் உரிய ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்ற விழிப்புணர்வும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.