“பணத்தையும் அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து போக நாம் ஒன்றும் அடிமைகள் அல்ல” என்று காஞ்சியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார்.

தமிழ்நாட்டை அடிமைப்படுத்த டெல்லியில் இருந்து காலந்தோறும் படையெடுப்புகள் வருவதாகக் குறிப்பிட்ட அவர், எத்தனை முறை வந்தாலும், எத்தனை துரோகிகளையும் கோமாளிகளையும் துணைக்கு அழைத்து வந்தாலும் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது என்று உறுதிபடத் தெரிவித்தார்.

நான் பார்க்காத படையெடுப்புகளே இல்லை என்று குறிப்பிட்ட முதலமைச்சர், மிரட்டல்களுக்குத் திமுக ஒருபோதும் அஞ்சாது என்பதையும் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.