தமிழக அரசியலில் வரவிருக்கும் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும் என்றும், தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் மற்ற கட்சிகள் அனைத்தும் காணாமல் போய்விடும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

“>

 

மற்ற கட்சிகளுக்குத் தனித்தன்மை இல்லை எனக் குறிப்பிட்ட அவர், இறுதியில் இந்த இரு பெரும் திராவிடக் கட்சிகளின் கூட்டணிகள் மட்டுமே களத்தில் நிலைத்து நிற்கும் எனத் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.