சமூக விரோதிகளின் பொறுப்பற்ற செயலால் ரயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் குளிரில் அவதிப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட தூர ரயிலின் பொதுப் பெட்டியில் இருந்த அவசரக்கால ஜன்னல் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்தியுள்ளனர்.
இதனால், ரயிலின் வேகத்திற்கு ஏற்ப உள்ளே புகுந்த கடும் குளிர்காற்று பயணிகளை நிலைகுலையச் செய்துள்ளது. குறிப்பாக, அந்த ஜன்னல் அருகே அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் போர்வையைப் போர்த்தியிருந்தும் குளிரால் நடுங்கியது பார்ப்போரை வேதனைப்பட வைத்துள்ளது.
View this post on Instagram
“>
இந்த அவல நிலையை விஷால் சர்மா என்ற பயணி வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ஜன்னல் கண்ணாடி இல்லாததால் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி பயணிகள் குளிரில் தவிப்பதையும், ஒருவேளை யாராவது தவறி விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
