சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் செய்யும் ஆபத்தான சாகசங்கள் சில நேரங்களில் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன. அந்த வகையில், ஓடும் பைக்கில் ‘ரீல்ஸ்’ எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் கிராமப்புற சாலை ஒன்றில் தனது நண்பர்களுடன் பைக்கில் சென்ற அந்த இளைஞர், ஓடும் பைக்கின் கைப்பிடியை விட்டுவிட்டு, கால்களை மேலே தூக்கி படுத்த நிலையில் சாகசம் செய்ய முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாகச் சமநிலையை இழந்த அவர், சாலையில் தூக்கியெறியப்பட்டு பலத்த அடியுடன் கீழே விழுந்தார்.
Reels बन गया भाई, अब जाकर चप्पल ख़रीद लो, और दवा खरीद लेना,
Road safety कहां गया, pic.twitter.com/rXCmFgsIhK— TANVEER (@mdtanveer87) January 23, 2026
“>
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. “ரீல்ஸ் எடுக்கப் போய் இப்போது மருந்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்” எனப் பல பயனர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் உயிர் விலைமதிப்பற்றது’ என்பதை மறந்து இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், சாலை பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் நெட்டிசன்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் சமூக வலைதள மோகத்தால் இளைஞர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதைத் தடுத்து நிறுத்தும் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
