உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் அருகே குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரை, அவரது மனைவி கயிற்றால் கட்டிப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பால் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஹமித்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர், நாள்தோறும் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
https://x.com/news24tvchannel/status/2014923979316986068
பலமுறை எச்சரித்தும் மாற்றமில்லாததால், ஆத்திரமடைந்த அவரது மனைவி சோனி, கணவரை ஒரு கட்டிலில் வைத்து கயிற்றால் கட்டிப்போட்டார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “கணவர் மது குடிக்கச் செல்வதைத் தடுக்கவே இவ்வாறு செய்தேன், போதை இறங்கும் வரை அவர் அங்கேயே இருக்கட்டும்” என்று அந்தப் பெண் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், தம்பதியினரிடையே நிலவும் குடும்பப் பிரச்சனை குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
