சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல்வேறு வினோதமான காணொளிகள் வெளியாகி வரும் நிலையில், நபர் ஒருவர் கனரக மோட்டார் சைக்கிளைத் தனது தலையில் சுமந்தபடி பேருந்தின் மீது ஏறும் காட்சி இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பதிவில், மிகுந்த எடையுள்ள இருசக்கர வாகனத்தை ஒரு நபர் அசால்ட்டாகத் தனது தலையில் தூக்கி வைத்துக்கொண்டு, ஏணி வழியாகப் பேருந்தின் மேற்கூரைக்கு ஏறிச் செல்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Amanat Bhai (@rowday______amanat_4u)

நிஜ வாழ்வின் பாகுபலி எனப் பலரால் வர்ணிக்கப்படும் இந்த நபரின் அசாத்தியமான உடல் வலிமையைக் கண்டு ஆயிரக்கணக்கானோர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இத்தகைய ஆபத்தான செயல்கள் உயிருக்கு உலை வைக்கக்கூடும் என்றும், ஒரு சில நெட்டிசன்கள் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொளியாக இருக்கக்கூடும் என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.