மும்பை நகரின் முக்கிய சுற்றுலாத் தலமான ஜுஹு சௌபாத்தி கடற்கரையில், அங்கீகாரம் இல்லாத புகைப்படக் கலைஞர் ஒருவர் சுற்றுலாப் பயணியைக் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
मुंबईतील जुहू चौपाटीवर गुरूवारी संध्याकाळी एक धक्कादायक प्रकार घडला. अनधिकृतपणे जुहू चौपटीवर फोटोग्राफीचा व्यवसाय करणाऱ्या तरूणांनी एका पर्यटकाला गंभीररीत्या मारहाण केली. यामध्ये पर्यटक रक्तबंबाळ होऊन पळत सुटला.#MaharashtraNews #Mumbai #juhuchaupatimumbai #CrimeNews less pic.twitter.com/oVIYBvfRRE
— Mumbai R News (@Mumbairnews) January 23, 2026
கடற்கரையில் புகைப்படம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒரு கும்பல் அந்தப் பயணியைத் துரத்திச் சென்று சரமாரியாகத் தாக்கியதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சாண்டாக்ரூஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஜுஹு கடற்கரையில் இது போன்ற சட்டவிரோதப் புகைப்படக் கலைஞர்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், அவர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் அதிக கட்டணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
மும்பையின் பாதுகாப்பிற்குச் சவாலாக அமைந்துள்ள இத்தகைய வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கடற்கரைப் பகுதிகளில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த உள்ளதாகக் காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.
