இளமை ஊஞ்சலாடும் வயதிலேயே பலரும் சோம்பிக் கிடக்கும் நிலையில், இந்த இரண்டு ‘இளம் வயது’ பெரியவர்கள் செய்த செயல் இணையத்தை அதிர வைத்துள்ளது.

குளிர்கால இரவு ஒன்றில், பரபரப்பான சாலை ஓரத்தில் இரண்டு முதியவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், இருவரும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் நடுத்தெருவிலேயே கட்டிப்புரண்டு சண்டையிடத் தொடங்கினர். ஒருவரை ஒருவர் கீழே தள்ளி, மல்யுத்த வீரர்களைப் போலத் தாக்கி அலறவிட்டனர்.

அருகில் இருந்தவர்கள் எவ்வளவு தடுத்தும் இருவரும் கேட்பதாக இல்லை. இந்த ‘ரோடு ரேஜ்’ (Road Rage) சம்பவத்தை அங்கிருந்த ஒரு காரின் பக்கவாட்டு கண்ணாடி வழியாக ஒருவர் வீடியோ எடுத்துப் பகிர, அது இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. “புளிச்சாலும் பால் புளிக்குமா? கிழமானாலும் சிங்கம் சிங்கம்தான்” என இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.