தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் இந்த பொதுச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

தவெக எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில், கட்சிக்கு நிரந்தரச் சின்னம் கிடைத்துள்ளது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு விசில்களைப் பரிசாக வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

“>

 

கட்சியின் முதல் தேர்தலிலேயே அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே சின்னம் கிடைத்துள்ளது தவெகவின் தேர்தல் வியூகத்திற்குப் பலம் சேர்த்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.