கோவை சரவணம்பட்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரைச் சக மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், பிள்ளைகள் படித்து முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையில் கல்வி நிலையங்களுக்கு அனுப்பும் பெற்றோர்,
இன்று போதை மற்றும் வன்முறை போன்ற ஆபத்துகளால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிதைந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாலேயே கல்வி நிலையங்கள் வன்முறைக் கூடாரங்களாக மாறி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
விளம்பர அரசியலில் மூழ்கியுள்ள திமுக அரசு, மாணவர்களின் வாழ்வைச் சின்னாபின்னமாக்கி வருவதாகவும், இத்தகைய சூழல் தொடர்வது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார்.
