முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களாக இருந்த ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

வைத்திலிங்கத்தின் இந்த முடிவால் அதிருப்தியடைந்த அவரது தீவிர விசுவாசிகளான தஞ்சை சண்முகப்பிரபு, சுவாமிநாதன், செல்லதுரை, ஜெகதீசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர், நேற்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

திமுகவில் பிரமாண்டமான இணைப்பு விழாவை நடத்தத் திட்டமிட்டிருந்த வைத்திலிங்கத்திற்கு, அவரது சொந்த ஊரிலேயே ஆதரவாளர்கள் கட்சி மாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.