சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவர்கள் தங்களது பிரிவு உபசார விழாவை முன்னிட்டு பொதுச் சாலைகளில் கார்களில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேகமாகச் சென்ற எஸ்யூவி ரக கார்களின் ஜன்னல்கள் மற்றும் மேற்கூரை வழியாக வெளியே தொங்கியபடி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காக மாணவர்கள் செய்த இந்தச் செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
போக்குவரத்து விதிகளை முற்றிலுமாக மீறி, மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மாணவர்கள் செய்த இந்த ‘சுவாக்’ கொண்டாட்டம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து, கோர்பா போலீஸார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை மூன்றுக்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 25,000 ரூபாய்க்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை நேரில் அழைத்து எச்சரித்த போலீஸார், இது போன்ற செயல்கள் மீண்டும் தொடர்ந்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
स्कूल के बच्चों का ऐसा स्टंट! https://t.co/qM0nXjfTG9 pic.twitter.com/rtTSMx8TNp
— Anurag Dwary (@Anurag_Dwary) January 22, 2026
“>
சமூக வலைதள மோகத்தால் இளைஞர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைப்பது கவலையளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
