அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடாவை இணைக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை அமெரிக்க வரைபடத்துடன் இணைத்தது போன்ற ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) புகைப்படத்தை அவர் பகிர்ந்தது இந்த சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.
“அமெரிக்கா இருப்பதால்தான் கனடா இன்று உயிர்ப்புடன் இருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்கா வழங்கும் ஏராளமான சலுகைகளை அனுபவிக்கும் கனடாவுக்கு நன்றியுணர்வு இல்லை என்றும் சாடியுள்ளார். முன்னதாக, மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்கா தனது பொருளாதார பலத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக கனடா பிரதமர் விமர்சித்திருந்த நிலையில், டிரம்பின் இந்த அதிரடி கருத்துக்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
