தூத்துக்குடி நகரில் செயல்பட்டு வரும் புரோட்டா கடைகளில் நைட் கிளப் என்ற பெயர் பலகையைக் கண்டு வெளிநாட்டு பயணி ஒருவர் குழப்பமடைந்த சுவாரசியமான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக வெளிநாடுகளில் நைட் கிளப் என்றால் மதுபானம் மற்றும் நடனத்துடன் கூடிய கேளிக்கை விடுதி என்று பொருள்படும்.

 

 

View this post on Instagram

 

A post shared by Gokula Krishnan Bhojan (@creative_gokula)

ஆனால், தூத்துக்குடியில் மாலை நேரங்களில் மட்டும் விற்பனை செய்யப்படும் பொரித்த புரோட்டா மற்றும் அசைவ உணவகங்களுக்கு நைட் கிளப் என்று பெயரிடுவது நீண்டகால மரபாக உள்ளது. இதை அறியாத அந்த வெளிநாட்டு பயணி, அங்குள்ள ஒரு புரோட்டா கடைக்குச் சென்று இது உண்மையிலேயே நைட் கிளப் தானா என்றும், மதுபானங்களும் பெண்களும் எங்கே என்றும் வினோதமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதற்குப் பதிலளித்த உணவக ஊழியர், இது கேளிக்கை விடுதி அல்ல என்றும், இரவு நேரத்தில் சுடச்சுட புரோட்டா விற்பனை செய்யும் உணவகம் என்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். ஊழியரின் விளக்கத்தைக் கேட்ட அந்தப் பயணி, தான் எதிர்பார்த்தது வேறொரு இடம் என்பதை உணர்ந்து ஏமாற்றத்துடன் அங்கிருந்து வெளியேறினார்.

இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.