திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் மோகன்ராஜ், கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு புதுத்தெரு பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று அவர் தனது நண்பர்களைப் பார்க்கச் செல்வதாகக் கூறியபோது, அவரது மனைவி அதற்குத் தடை விதித்துக் கண்டித்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த மோகன்ராஜ், வீட்டின் அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்து பார்த்த குடும்பத்தினர், மோகன்ராஜ் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமான ஒரே மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
