சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நேற்று (ஜன. 20) இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலையோரம் முதியவர் ஒருவர் கையில் கட்டுக்கட்டாக பணத்தை வைத்தபடி, திகைப்புடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை அணுகிய போலீசார் விசாரணை நடத்தியபோது, அவருக்குக் கண்பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு இருப்பதும், அவரால் பேச முடியாத நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இருப்பினும், அவரது பாதுகாப்பைக் கருதி அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவருக்கு உணவளித்து ஆசுவாசப்படுத்தினர்.

“>

 

பின்னர், அவரது சட்டைப் பையில் இருந்த முகவரி மற்றும் அடையாள அட்டையை வைத்து, அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தனர். இதனையடுத்து, அவர் கையில் வைத்திருந்த பல ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைப் பாதுகாப்பாக எண்ணி, அவரை அவரது வீட்டிற்கே அழைத்துச் சென்று உறவினர்களிடம் ஒப்படைத்தனர். முதியவரின் பணத்திற்கு எவ்வித பாதிப்பும் இன்றி, அவரைப் பாதுகாப்பாக மீட்ட போலீசாரின் இந்தச் செயலைப் பாராட்டிச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.