சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட புகாரால் படத்தின் வெளியீட்டைத் தடுப்பது சட்டப்படி தவறு என்று நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளதால், விரைவில் படம் திரைக்கு வரும் என்று விஜய் தரப்பினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.