தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், தற்போது அடுத்தடுத்த சட்டப் போராட்டங்களில் சிக்கித் தவித்து வருகிறது.
ஏற்கனவே இந்தப் படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், படம் எப்போது ரிலீஸாகும் என்பதில் பெரும் இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ள அமேசான் பிரைம் நிறுவனம் அதிரடியாகப் போர்க்கொடி தூக்கியுள்ளது. “படம் ரிலீஸ் தாமதமானதால் எங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது; அதற்கு உரிய இழப்பீட்டைத் தயாரிப்பு நிறுவனம் வழங்க வேண்டும்” என அமேசான் பிடிவாதம் பிடித்து வருகிறதாம்.
ஒருவேளை இழப்பீடு வழங்கத் தவறினால், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்சார் சிக்கலில் இருந்து மீண்டு வருவதற்குள் ஓடிடி நிறுவனம் கொடுத்துள்ள இந்த நெருக்கடி, ‘ஜன நாயகன்’ தயாரிப்பு தரப்பை நிலைகுலைய வைத்துள்ளது.
