கேரளாவில் பேருந்து பயணத்தின்போது இளம்பெண் ஒருவர் பகிர்ந்த வீடியோவால் ஏற்பட்ட மனஉளைச்சலில், 42 வயதான தீபக் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோட்டைச் சேர்ந்த தீபக், பேருந்தில் தன்னை தவறான முறையில் தொட்டதாக ஷிம்ஜிதா முஸ்தபா என்ற பெண் எடுத்த செல்ஃபி வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது.

இதனால் எந்தவித விசாரணையுமின்றி தீபக் மீது கடுமையான விமர்சனங்களும் வசைபாடல்களும் குவிந்தன. மிகுந்த மனவேதனையடைந்த தீபக், தன் மீதான பழியைத் தாங்க முடியாமல் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார். தீபக் இறப்பதற்கு முன் தனது நண்பரிடம் பேசிய உருக்கமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த வீடியோ குறித்து அவரது நண்பர் தெரிவித்தபோது தீபக் அதிர்ச்சியடைந்ததுடன், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

“>

மேலும் தனது நேர்மையை நிரூபிக்கவும், தன் மீது வீண்பழி சுமத்திய அந்தப் பெண்ணிற்கு எதிராக சட்டப்படி வழக்குத் தொடரவும் தீபக் திட்டமிட்டிருந்தார். “நான் குற்றமற்றவன் என்பதால் வழக்கறிஞரைச் சந்தித்துப் புகார் அளிக்க வேண்டும்” என்று அவர் தனது கடைசி உரையாடலில் நம்பிக்கையுடன் பேசியுள்ளார். ஆனால், சமூக வலைதளங்களின் ஒருதலைப்பட்சமான தாக்குதல் ஒரு அப்பாவி மனிதனின் உயிரைப் பறித்திருப்பதுடன், இது போன்ற சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.