ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது இடத்தில் ஒரு நபரின் அனுமதியின்றி அவரைப் புகைப்படம் எடுத்து, அதனை ஸ்னாப்சாட் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அபுதாபி நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட நபர் தொடர்ந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு இந்திய ரூபாயில் சுமார் ₹6 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. நவீன டிஜிட்டல் உலகில் தனிமனித சுதந்திரமும், தனியுரிமையும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

இழப்பீட்டுத் தொகையோடு மட்டுமல்லாமல், சட்டத்தை மீறிய அந்த நபரின் ஸ்னாப்சாட் கணக்கை நிரந்தரமாக நீக்கவும், அவர் அடுத்த 6 மாதங்களுக்கு இணைய சேவைகளைப் பயன்படுத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் பொது இடங்களில் பிறரை அவர்களின் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுக்க கூடாது.

இந்நிலையில் வீடியோ எடுப்பது சட்டப்படி குற்றம் என்பதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது. சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது மற்றவர்களின் கண்ணியத்திற்கும், தனியுரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்ற பாடத்தை இந்தப் புகழ்பெற்ற தீர்ப்பு அனைவருக்கும் வழங்குகிறது.