விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு காய்கறி விற்பனை செய்யும் தாயின் மகன் மத்திய இருப்பு காவல் படைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நெகிழ்ச்சியான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிந்துதுர்க் மாவட்டம் குடால் பகுதியைச் சேர்ந்த கோபால் சாவந்த் என்ற இளைஞர் தனது விடாமுயற்சியால் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Vilas Kudalkar (@vilas.kudalkar.52)

நடைபாதையில் காய்கறி விற்றுத் தனது மகனைப் படிக்க வைத்த தாயிடம் பூங்கொத்து வழங்கி காலில் விழுந்து அவர் ஆசி பெற்றபோது அங்கிருந்தவர்கள் உணர்ச்சிவசப்பட்டனர். தனது மகன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்று அந்தத் தாய் கண்ணீருடன் தெரிவித்த காட்சிகள் பலரது மனதை உருக்கியுள்ளன.

தாயின் கடின உழைப்பிற்குத் தகுந்த பலன் கிடைத்துவிட்டதாகப் பாராட்டி வரும் இணையவாசிகள் இந்தச் சாதனையை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கொண்டாடி வருகின்றனர்.