பெங்களூரு நகரின் வெளிவட்டாரப் பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகக் கூறி இளம்பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள காணொளி தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு 9 மணி அளவில் உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வீடு திரும்பும் போது தெருவிளக்குகள் இல்லாத இருட்டான சாலைகளால் தான் மிகுந்த அச்சம் அடைந்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
பெங்களூரு நகரின் மையப்பகுதிகள் பாதுகாப்பாக இருந்தாலும் புறநகர்ப் பகுதிகள் பெண்களுக்கு ஆபத்தானதாக இருப்பதாகவும் அங்கு குடியேறும் முன் இருமுறை யோசிக்குமாறும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தக் கருத்துக்கு ஆதரவாகப் பலரும் தங்களின் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வரும் நிலையில் பெங்களூரு நகரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புறநகர்ப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
