சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ இப்போது பயங்கரமாக வைரலாகி வருகிறது. அதில், ஒரு வீட்டின் வாசலில் அழகாகப் போடப்பட்டிருந்த வண்ணக் கோலத்தை, அவ்வழியே வந்த ஒரு பள்ளிச் சிறுமி தனது கால்களால் தேய்த்து அழிக்கிறார். அந்தச் சிறுமியுடன் வந்த புர்கா அணிந்த பெண், சிறுமி தப்பு செய்வதைப் பார்த்தும் அவரைத் தடுக்கவில்லை. மாறாக, அந்தச் சிறுமி கோலத்தை அழிக்கும் வரை அங்கேயே பொறுமையாக நின்று வேடிக்கை பார்த்தார். இந்த மொத்தக் காட்சியும் அந்த வீட்டில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.

​இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடும் கோபத்தில் உள்ளனர். “குழந்தைகள் தெரியாமல் தப்பு செய்தால்கூட, பெரியவர்கள் அதைச் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டும். ஆனால், இந்தப் பெண் அந்தச் சிறுமி கோலத்தை அழிப்பதைக் கண்டு அமைதியாக நின்றது மிகவும் தவறு” என்று அந்தப் பெண்ணைக் கண்டித்து வருகின்றனர். அடுத்தவர் கஷ்டப்பட்டுப் போட்ட கோலத்தை மதிக்கக் கற்றுக்கொடுக்காமல், இப்படி வன்மத்தோடு வளர்ப்பது எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.