கிச்சனுக்குள் நுழைந்தாலே கால்கள் வலிக்க மணிக்கணக்கில் நின்று கொண்டு சமைப்பது தான் பலரின் வழக்கமாக இருக்கிறது. ஆனால், “எல்லாவற்றிற்கும் ஒரு மாற்று வழி உண்டு” என்பதை ஒரு நபர் தனது வீடியோ மூலம் நிரூபித்துள்ளார்.

நின்றுகொண்டே பராத்தா சுடுவதற்குப் பதிலாக, அடுப்புக்கு அருகிலேயே ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டு, மிக சௌகரியமாக அவர் பராத்தா சுடும் வீடியோ தான் இப்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்.

“உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது என்பதை உணரும் தருணம்” என்ற நகைச்சுவையான கேப்ஷனுடன் பகிரப்பட்ட இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது நிஜமாவே ஒரு ஜீனியஸ் ஐடியா” என்று பாராட்டி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sudhanshu Oberoi (@devops_karamchari)

“ஏன் எல்லா கிச்சனிலும் நாற்காலிகள் இருப்பதில்லை? இது வேலையை எவ்வளவு எளிதாக்குகிறது பாருங்கள்” எனப் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் முதுகு வலி உள்ளவர்களுக்கு இந்த ஐடியா ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். நம் முன்னோர்கள் காலத்தில் அமர்ந்து கொண்டு சமைத்த முறையை இது நினைவுபடுத்துவதாகப் பலரும் நெகிழ்ந்து போயுள்ளனர்.