சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் மாயாஜால வீடியோ ஒன்றில், காகிதத்தில் அச்சிடப்பட்ட புறாவின் படத்தை ஒரு மந்திரவாதி நொடிப் பொழுதில் உயிருள்ள உண்மையான புறாவாக மாற்றும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
जादूगर कितनी सफाई से अपने जादू को दिखाते हैं !🎩
और अगर आपका मोबाइल कैमरा अच्छा है तो जादूगर की जादूगरी पकड़ी जा सकती है❌️👇 pic.twitter.com/nV4lcbediL
— TAHKEEK..A (@Tahkeek_KSA) January 15, 2026
ஒரு சட்டகத்தில் உள்ள புறாவின் படத்தின் மீது மந்திரவாதி தனது கையை அசைத்தவுடன், அங்கிருந்து ஒரு வெள்ளை நிறப் புறா படபடவெனப் பறந்து செல்வதைக் கண்டு அங்கிருந்த பார்வையாளர்கள் திகைத்துப் போனார்கள். இருப்பினும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த வீடியோவை மெதுவான இயக்கத்தில் ஆய்வு செய்தபோது அந்த அதிசயத்தின் பின்னால் ஒளிந்திருந்த ரகசியம் அம்பலமானது.
உண்மையில், அந்தச் சட்டகத்தின் பின்புறம் ஒரு ரகசியப் பகுதியில் அந்தப் புறா ஏற்கனவே மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மந்திரவாதி மிக லாவகமாகப் புறாவின் படத்தை ஒரு குலுக்கு குலுக்கி அகற்றியபோது அங்கிருந்து அந்தப் புறா வெளியேறியது. வெறும் கண்களால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிக வேகமாகச் செய்யப்பட்ட இந்தத் திறமையான செயல் குறித்து இணையதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
