காட்டில் சிங்கம் தான் ராஜா என்றாலும், சில நேரங்களில் கழுதைப்புலிகள் கூட்டமாகச் சேர்ந்து சிங்கத்தையே குறிவைக்கும். அப்படி ஒரு ஆபத்தான சூழலில், காயமடைந்த ஒரு சிங்கத்தை வேட்டையாட இரண்டு கழுதைப்புலிகள் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தன. ஆனால், அங்கே யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் நடந்தது.
தென்னாப்பிரிக்காவின் குரூகர் தேசிய பூங்காவில் (Kruger National Park) எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், காயத்துடன் தள்ளாடும் சிங்கத்தைச் சுற்றி கழுதைப்புலிகள் வலம் வருகின்றன.
Wow, this super rare and touching moment at Kruger National Park always gives me goosebumps! 🐘🦁
A giant elephant charged in, using its trumpeting roars and sheer power to drive away a pack of hyenas that were circling and stalking the severely injured lion, saving its life… pic.twitter.com/AyS8eFXrnL
— Beauty of music and nature 🌺🌺 (@Axaxia88) January 16, 2026
அப்போது திடீரென அங்கே வந்த ஒரு பிரம்மாண்ட யானை, கழுதைப்புலிகளின் தந்திரத்தைப் புரிந்துகொண்டது. உடனே ஆக்ரோஷமாகப் பிளிறியபடி, கழுதைப்புலிகளை நோக்கி யானை சீறிப் பாய்ந்தது.
யானையின் அந்த அசுர வேகத்தையும் ஆவேசத்தையும் பார்த்த கழுதைப்புலிகள், உயிர் பிழைத்தால் போதும் என்று அங்கிருந்து தெறித்து ஓடின.
பரம எதிரிகளாக இருந்தாலும், இக்கட்டான நேரத்தில் ஒரு சிங்கத்தைக் காப்பாற்ற யானை காட்டிய அந்த ‘மனிதாபிமானம்’ இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது.
