முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (OPS) தான் எக்காலத்திலும் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு ஓ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
எந்தக் காலத்திலும் தனிக்கட்சி தொடங்கும் திட்டம் தன்னிடம் இல்லை என்பதை அவர் உறுதிபடத் தெரிவித்தார். வரும் தேர்தல்களில் யாருடன் கூட்டணி என்பது குறித்த அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் முறைப்படி வெளியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் களத்தில் தனிக்கட்சி குறித்த யூகங்கள் நிலவி வந்த நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய ஓ பன்னீர்செல்வம் அதிமுக இணைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், விரைவில் விஜய் முன்னிலையில் தமிழகத்தை வெற்றிகழகத்தில் இணைவதாக செய்தி பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பிரதமர் மோடி மதுராந்தகத்தில் வருகிற 23ஆம் தேதி பாஜக சார்பில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும்போது கூட்டத்திற்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அதற்கு ஓபிஎஸ் இல்லை என்று பதிலளித்தார்.
