நேற்று வரை நம்முடன் தோள் மீது கை போட்டு சிரித்துப் பேசி விளையாடிய நண்பனை, இன்று சடலமாகப் பார்ப்பதுதான். இலங்கையின் முல்லைத்தீவு மண்ணையே இன்று சோகக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது ஒரு நெஞ்சை உருக்கும் காட்சி. கடந்த ஜனவரி 12-ஆம் தேதி நடந்த கோர விபத்து, துடிப்பான ஒரு இளம் கால்பந்தாட்ட வீரரின் கனவுகளைச் சிதைத்துவிட்டது.
உயிரிழந்த அந்த இளைஞருக்குக் கால்பந்துதான் உயிர். அவர் இனி எழுந்து வரமாட்டார் என்று தெரிந்தும், அந்த நண்பனின் கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது சக வீரர்கள் செய்த காரியம் கல் நெஞ்சையும் கரையச் செய்யும்.
இறுதி ஊர்வலத்தின் போது, நண்பனின் சடலப் பேழையைச் சுமந்து கொண்டு அவர்கள் நேராகச் சென்றது இடுகாட்டிற்கு அல்ல; அவர்கள் ஓடித் திரிந்து விளையாடிய அந்தப் புனிதமான கால்பந்து மைதானத்திற்கு! அங்கே கோல் போஸ்ட் அருகே நண்பனின் உடலை வைத்து, ஒரு பந்தை மெதுவாக உருட்டி விட்டு, அந்தப் பேழையாலேயே பந்தை மோதச் செய்து ஒரு ‘இறுதிக் கோல்’ அடித்தார்கள்.
அந்த நண்பனே கடைசியாகக் கோல் அடித்தது போல அவர்கள் உருவாக்கிய அந்தக் காட்சி… அங்கிருந்த அனைவரையும் கதறி அழ வைத்தது. “விளையாட்டில் மட்டுமல்ல.. நட்பிலும் நீதான்டா சாம்பியன்” என முல்லைத்தீவு கண்ணீருடன் அந்த வீரருக்கு விடை கொடுத்தது.
