நடிகர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை)  மறுப்புத் தெரிவித்தது. முன்னதாக, இப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்தத் தடையை எதிர்த்துப் படக்குழுவினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், இது தொடர்பாக மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தையே அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தச் சென்சார் விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வரும் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் உரிய விசாரணை நடத்தி இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.