தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த வைஷ்ணவி, தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சிக்கு எதிராகப் பல அதிரடி கருத்துகளைக் கூறி வருகிறார். இந்நிலையில், இன்று போகி பண்டிகையை முன்னிட்டு, விஜய் புகைப்படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அவர் தீயிட்டு எரித்துள்ளார். இந்தச் செயல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​வைஷ்ணவியின் இந்த வீடியோவைக் கண்டு தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் கடும் கோபமடைந்துள்ளனர். “அரசியல் ரீதியாக விமர்சிப்பதில் தவறில்லை, ஆனால் ஒருவருடைய புகைப்படத்தை எரிப்பது நாகரிகமற்ற செயல்” என அவர்கள் கொதித்துப் போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“நீங்க ரொம்ப எல்லை மீறிப் போறீங்க மேடம்” என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் கண்டனங்களை மிக ஆவேசமாகப் பதிவு செய்து வருவதால், இணையமே தற்போது போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.