மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர்கள் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மற்றும் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

டெல்லியில் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பாக இந்த விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், அனைவருக்கும் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

தனது படங்கள் மற்றும் அரசியல் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தான் எந்தப் பிரச்சாரமும் செய்யவில்லை என்றும், அதில் தனக்கு விருப்பமில்லை என்றும் கூறினார்.

மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துவிட்டதாகவும், தனது அடுத்தடுத்த படங்கள் விரைவில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.