இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பெரும் பேச்சுகள் நிலவி வரும் வேளையில், அடிமட்டத்தில் இருக்கும் ஏழைகளின் வறுமை நிலையை இந்த ஒரு காணொளி தோலுரித்துக் காட்டியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு சிறுமி குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட உணவுகளைத் தேடி எடுத்துக் கொண்டிருக்கிறார். “அம்மா, எனக்கு கொஞ்சம் பிரட் கொடுங்க” என்று அவர் கேட்கும் அந்த வார்த்தைகள் கேட்பவர் எவரையும் கண்கலங்க வைக்கும்.

​உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் என்று நாம் பெருமை பேசிக்கொண்டாலும், இன்றும் ஒரு வேளை உணவிற்காக ஒரு பிஞ்சு குழந்தை குப்பைத் தொட்டியைத் தேடிச் செல்லும் அவலம் நீடிப்பது வேதனையானது. குறிப்பாக, சமூகத்தில் பின்தங்கிய தலித் மற்றும் ஏழை மக்கள் இதுபோன்ற கடும் வறுமைக்குத் தள்ளப்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுவா நாம் காண விரும்பிய புதிய இந்தியா? என்று இணையவாசிகள் அரசை நோக்கி ஆவேசமாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.