சமூக வலைத்தளமான X-ல் வெளியாகி இருக்கும் ஒரு காணொளி, பார்ப்பவர்களை ஒரு நிமிடம் திகைக்க வைத்துள்ளது. ஓடும் பைக்கில் ஒரு தம்பதி சென்று கொண்டிருக்கும்போது, பின்னால் அமர்ந்திருக்கும் பெண், வண்டியை ஓட்டிச் செல்லும் அந்த ஆணை இடைவிடாமல் தாக்கி வருகிறார். தலைமுடியைப் பிடித்து இழுப்பதும், முகத்தில் ஓங்கி அறைவதுமாக அந்தப் பெண் ஆக்ரோஷமாகச் செயல்படுகிறார். வண்டியை ஓட்டுபவர் நிலைகுலைந்து கீழே விழும் வாய்ப்பு இருந்தும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பெண் நடுரோட்டில் இத்தகைய செயலில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், “என்னதான் பிரச்சனையாக இருந்தாலும் ஓடும் வண்டியில் இப்படிச் செய்வது சரியா?” என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது வண்டி ஓட்டுபவருக்கு மட்டுமல்லாமல், அந்தச் சாலையில் வரும் மற்றவர்களுக்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் செயலாகும். தனிப்பட்ட சண்டைகளை பொது இடத்திற்கு கொண்டு வந்து, உயிரைப் பணையம் வைத்து இப்படி மோதுவது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.