பெங்களூரு கே.ஆர் புரம் ரயில் நிலைய சந்திப்பில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த லட்சுமி நரசம்மா என்ற பெண் ஊர்க்காவல் படை வீராங்கனை மீது மோகினி என்ற இளம்பெண் மிகக் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்த இளம்பெண் அரைகுறை ஆடையுடன் சாலையின் நடுவே நின்று போக்குவரத்திற்கு இடையூறு செய்ததோடு, அங்கிருந்த சில இளைஞர்கள் அவரை கேலி செய்ததைக் கண்ட வீராங்கனை, அப்பெண்ணுக்கு அறிவுரை கூறி ஒழுங்காக ஆடை அணியுமாறு கேட்டுக்கொண்டார்.

 

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண், சீருடையில் இருந்த வீராங்கனை என்றும் பாராமல் அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து முகத்தில் பலமாக தாக்கியதில் அவருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. இது குறித்து ராமமூர்த்தி நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட இளம்பெண்ணைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.