மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு இளைஞர், தனது ஐபோன் திரை உடைந்த பிறகும், அதைத் தூக்கி எறியாமல் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக ஐபோன் திரை சேதமடைந்தால் அதைச் சரிசெய்ய பெரும் தொகை செலவாகும் என்பதால், அந்த இளைஞர் ஒரு ‘தேசி ஜூகாட்’ தொழில்நுட்பத்தைக் கையாண்டுள்ளார்.

இந்நிலையில் தனது போனுடன் ஒரு மவுஸை இணைத்து, அதன் மூலம் ஆப்ஸ்களைத் திறப்பதும், திரையை ஸ்க்ரோல் செய்வதும் என லாவகமாகப் போனை இயக்குகிறார். ஐபோனின் தொடுதிரை வேலை செய்யாத நிலையிலும், கணினியைப் போல மவுஸ் கர்சர் மூலம் அவர் போனைப் பயன்படுத்தும் விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Rehan Singh | Kolkata Blogger (@wakeupfantasy9)

“>

இந்த வீடியோ ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ மற்றும் ‘டெய்லி ஹன்ட்’ போன்ற தளங்களில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விலையுயர்ந்த ஐபோன் பழுதானால் கவலைப்படும் பலருக்கு, இது போன்ற எளிய மற்றும் மலிவான தீர்வுகள் ஒரு உத்வேகமாக அமைகின்றன.

மேலும் “இந்தியர்களின் மூளை எப்போதும் தனித்துவமானது” என்றும், “இதுதான் உண்மையான இந்தியப் புத்திசாலித்தனம்” என்றும் நெட்டிசன்கள் இந்த இளைஞரின் முயற்சியைப் பாராட்டி வருகின்றனர். தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு அதிக செலவின்றித் தீர்வு காண்பதில் இந்தியர்கள் எப்போதும் முன்னணியில் இருப்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.