சமூக வலைதளங்களில் அவ்வப்போது வினோதமான மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு நபர் பைக் ஓட்டும் வீடியோ இணையவாசிகளிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் “இப்படியெல்லாம் கூட ஒருவரால் பைக் ஓட்ட முடியுமா?” என்று வியக்கும் வகையில் அந்த நபரின் விசித்திரமான ஓட்டுதல் முறை அமைந்துள்ளது. இந்த வீடியோவில், அந்த நபர் எந்தவித அச்சமும் இன்றி மிகவும் வித்தியாசமான பாணியில் பைக்கை கையாளுவது காண்போரைக் கவர்ந்துள்ளது.

“>

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “யாரப்பா இவன், இப்படி பைக் ஓட்டுகிறான்?” என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். பலர் இதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்பதாகக் கூறினாலும், போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் சிலர் முன்வைக்கின்றனர்.

இதை பார்த்தால் வேடிக்கை ஒருபுறம் இருந்தாலும், பொது சாலைகளில் இதுபோன்ற சாகசங்கள் செய்வது ஆபத்தானது என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது. இருப்பினும், இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது.