ஆஸ்திரேலியாவின் வேலை கலாச்சாரம் மற்றும் அங்குள்ள தொழிலாளர்களின் வருமானம் குறித்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வெளியிட்ட காணொளி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் எந்தவொரு வேலையும் சிறியதாகக் கருதப்படுவதில்லை என்றும், துப்புரவுத் தொழிலாளர்கள் முதல் கட்டுமானப் பணியாளர்கள் வரை அனைவருக்கும் சமமான மரியாதை அளிக்கப்படுவதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
<a href=”http://

“>
குறிப்பாக, அங்கு குறைந்தபட்ச ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு சுமார் 25 ஆஸ்திரேலிய டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1,400 ரூபாய்க்கும் மேல்) வழங்கப்படுவதால், வெறும் இரண்டு மணி நேர உழைப்பிலேயே ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஈட்ட முடியும் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அலுவலகப் பணிகளில் இருப்பவர்களை விட, உடல் உழைப்பைச் செலுத்தும் பிளம்பர்கள் மற்றும் தொழிலாளர்கள் அங்கு அதிக வருவாய் ஈட்டுவதாகவும், உழைப்பிற்கு நேரடியான அங்கீகாரம் கிடைப்பதே அந்நாட்டின் சிறப்பு என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

மறுபுறம், இந்தியாவிலுள்ள தொழிலாளர்களின் தற்போதைய நிலை குறித்து அந்தப் பெண் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் இரவு பகலாக உழைக்கும் பிளம்பர்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மாத இறுதியில் வெறும் 7,000 முதல் 9,000 ரூபாய் மட்டுமே ஊதியமாகக் கிடைப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வளவு சொற்ப வருமானத்தில் ஒரு குடும்பத்தை நடத்துவது பெரும் சவாலானது எனக் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் கிடைக்கும் கௌரவமான ஊதியமும், உழைப்பவருக்குச் சமூகம் அளிக்கும் மரியாதையுமே பலரையும் அந்நாடுகளை நோக்கி ஈர்ப்பதாக அவர் விளக்கியுள்ளார்.

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளி, இந்திய மற்றும் ஆஸ்திரேலிய வேலைச் சூழலுக்கு இடையிலான இடைவெளியைத் காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.