“வாடகைக்கே ₹10 லட்சமா?” என மும்பை வாசிகளையே வாயடைக்க வைத்திருக்கிறது இந்த அல்ட்ரா லக்ஷரி அபார்ட்மெண்ட். வொர்லி பகுதியில் உள்ள இந்த பிரம்மாண்டமான ட்ரம்ப் டவர்ஸில் 2,900 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டின் வீடியோவை பிரபல ரியல் எஸ்டேட் கலைஞர் ரவி கேவால்ரமணி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள வசதிகள் ஒவ்வொன்றும் மிரள வைக்கின்றன.
இது ஒரு 4.5 BHK வகை வீடாகும். இதில் நான்கு படுக்கையறைகள், அட்டாச்டு பாத்ரூம்கள், வேலையாட்களுக்கு எனத் தனி அறை மற்றும் நவீன வசதிகள் கொண்ட கிச்சன் என அனைத்தும் உலகத்தரம் வாய்ந்தவை.
View this post on Instagram
மார்பிள் தரைகள், ஏசி வசதி மற்றும் வெளியே இருக்கும் சத்தத்தைக் குறைக்கும் இரட்டை கண்ணாடி ஜன்னல்கள் என இந்த வீட்டின் ஒவ்வொரு மூலையும் ‘லக்ஷரி’யை பறைசாற்றுகின்றன.
இதன் வாடகை ₹10 லட்சம் என்று தெரிந்ததும், நெட்டிசன்கள் “இந்த வீடியோவை பார்க்கவே எனக்கு 289 ரூபாய் டேட்டா பேக் தான் இருக்கு, இதுல 10 லட்சம் வாடகையா?” என வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
