கடலூரில் நேற்று நடைபெற்ற தேமுதிக மாநாட்டில், தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்கி முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மொத்தம் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இந்த மாநாட்டைத் தொடர்ந்து, ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துவிட்ட நிலையில், தற்போது தேமுதிக அதிமுக அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைக்குமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
