ஈரானில் நிலவி வரும் ஒடுக்குமுறை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராகத் தங்களது குரல்களைப் பதிவு செய்து வரும் போராட்டக்காரர்களின் வரிசையில், ஒரு முதிய பெண்மணியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உலகையே உலுக்கி வருகிறது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற இரவு நேரப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், முகத்தில் ரத்தம் வழிந்தோடும் நிலையிலும் அந்தப் பெண்மணி துணிச்சலுடன் முழக்கமிடுகிறார். “நான் பயப்படவில்லை, நான் ஏற்கனவே 47 ஆண்டுகளாக இறந்துதான் இருக்கிறேன்” என்று அவர் ஆவேசமாகக் கூறியுள்ளார்.
I’m not afraid. I’ve been dead for 47 years this is the voice of a woman in Iran who is fed up with the Islamic republic.
47 years ago, the Islamic Republic took our rights and turned a nation into hostages.
Today people have nothing left to lose, they rise.
Iran is rising. pic.twitter.com/GAawmynE0C— Masih Alinejad 🏳️ (@AlinejadMasih) January 8, 2026
“>
மேலும் ஈரானிய மக்களின் பல தசாப்த கால விரக்தியையும், அடக்கப்பட்ட கோபத்தையும் வெளிப்படுத்தும் வலிமையான அடையாளமாக மாறியுள்ளது. ஈரானியச் செயற்பாட்டாளர் மசிஹ் அலிநேஜாத் என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ, 1979-ஆம் ஆண்டு இஸ்லாமியக் குடியரசு ஆட்சியைப் பிடித்தது முதல் மக்கள் அனுபவித்து வரும் சுதந்திரமின்மையைச் சுட்டிக்காட்டுகிறது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் கடுமையான சட்டத் திட்டங்கள் போன்ற காரணங்களால் மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வரும் நிலையில், பாதுகாப்புப் படைகளின் அடக்குமுறைக்கும் அஞ்சாமல் “இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை” என்ற நிலையில் அந்தப் பெண்மணி பேசியிருப்பது போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது.
